Tuesday 14 May 2013


சாதிய ஏற்ற தாழ்வுகள்-ஓர் ஆய்வு:

     உலகாண்ட தமிழர்களை சில தமிழர்களின் துணைகொண்டு வீழ்த்தி வடுகர்கள் ஆட்சியை பிடித்தனர்.அதற்கு பிறகே தமிழினம் என்ற ஒற்றை குடையின் கீழ் இருந்த தமிழர்கள், சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டனர்.தொழில் ரீதியான இனக்கூருகளை சாதிகளாக பிரித்து அதில் ஏற்றத்தாழ்வுகளை புகுத்தினர்.

உயர்வு/தாழ்வு:
       தமிழர்களின் அரசு அமைப்பில் சில படிநிலைகள் இருந்தன.பொதுவாக ஏற்ற தாழ்வு என்பது படிநிலையில் மேல் இருப்பவர்களை உயர்ந்த சாதியாகவும்,அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களை கீழ் சாதியாகவும் பிரித்திருக்க வேண்டும்.

வடுக சூழ்ச்சி :
     ஒன்று பட்ட தமிழர்களின் தலைவனான மள்ளர்கள் இன்று தாழ்த்தப்பட்ட சமூகமாகவும்,அரசு அமைப்பில் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த பிற தமிழ் சாதிகள் ஆதிக்க சாதியினராகவும் இருப்பது எப்படி?
 அதற்கான விடை “வடுக சூழ்ச்சி

பொதுவாக ஒரு நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களிற்கும் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கும் அதிகாரத்தில் சில வேறுபாடுகள் இருக்கும்.படிநிலையில் கீழ் இருபவர்களுக்கு அந்த அதிகாரத்தின் மேல் கண்டிப்பாக ஒரு ஈர்ப்பு இயற்கையாகவே இருப்பதுண்டு.இது மானுட இயல்பு.அந்த அதிகாரத்தை அடைவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது யாரும் தவற விடுவதில்லை.

     மள்ளர்களை அடிமை படுத்த நினைத்த வடுகர்கள் அப்படியொரு வாய்ப்பை பிற சகோதர தமிழ் சாதிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தனர்.மள்ளர்களின் அதிகாரங்களை பிடுங்கி பிற சாதியுனருக்கு கொடுத்து மள்ளர்களை தாழ்ந்தவர்களாகவும் மற்ற சாதியினரை உயர்ந்தவர்களாகவும் பறைசாற்றினர். மள்ளர்களை அடிமை படுத்த அணைத்து அதிகாரங்களையும் பிற சாதியினருக்கு கொடுத்ததோடு,அவர்களின் நிலங்களையும் கையகப்படுத்தி அவர்களை விவசாய கூலிகளாக மாற்றி பல அடக்குமுறைகளுக்கு ஆட்படுத்தினார்.ஆனால் அதில் இன்றுவரை அவர்களால் முழுமையான வெற்றி பெற முடியவில்லை.தமிழகத்தின் 65% நிலங்கள் மள்ளர்கள் கைவசமே இன்றளவும் இருகின்றது.

     தமிழர்களை பிரிப்பதில் வடுகர்கள் பல நுணுக்கங்களை கையாண்டனர்.தேவேந்திர குல வேளாளர்கள் என்பவர்கள்  குடும்பன்,மூப்பன், காலாடி,மண்ணாடி என பல உட்பிரிவுகளை கொண்ட ஒரு இனம்.இதில் குடும்பர்கள்  எனப்படுபவர்கள் படிநிலையில் அனைவருக்கும் மேல் இருப்பவர்கள்.ஆனால் அவர்கள் இன்று தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும்(SC),மற்றவர்கள் பிற பிரிவுகளான BC,MBC,DNC போன்ற பட்டியலிலும் உள்ளனர்.

அரசியல் அடிமைகள்:

     
      மள்ளர்களை அடிமை படுத்துவதாக நினைத்துகொண்டிருக்கும் பிற சகோதர தமிழ் சாதிகள் உண்மையில் வந்தேறி வடுகர்களின் அரசியல் வாரிசுகளான திராவிடர்களின் அரசியல் அடிமைகளே.மூவேந்தர்களின் வீழ்ச்சிக்கு பிறகு எத்தனை தமிழர்கள் இம்மண்ணை ஆண்டுள்ளனர்?

ஒன்றுபடு தமிழா:

    
        வடுகர்களின் சூழ்ச்சியால் ஒன்றாய் இருந்த எம் தமிழினம் சாதியின் பெயரால் பிரிக்கப்பட்டது.அதே பிரிவினையை பயன்படுத்தி இன்றளவும் வடுகர்களின் வாரிசுகளே நம் தமிழ் மண்ணை ஆண்டு வருகின்றனர்.ஆதிக்க சாதியாய் தங்களை காட்டிக்கொள்ளும் பிற தமிழ் சாதிகளால் இன்றளவும் அரியணையில் அமரமுடியாததற்கு காரணம் என்ன?
     சாதிகளை கடந்த தமிழினம் ஒன்று அமைவதே இதற்கு ஒரே தீர்வு.

            “தமிழராய் இணைவோம்,மீண்டும் தமிழர் ஆட்சி அமைப்போம் 

தமிழர்களின் அரசியல்


தமிழர்களின் அரசியல் கட்டமைப்பு:
     
          தமிழர்களின் ஆட்சியில் அரசு என்பது ஒரு உறுதியான கட்டமைப்பாக இருந்தது.தமிழர்களின் தலைவனாக அன்றைய காலகட்டங்களில் குடும்பன் என்னும் பிரிவை சேர்ந்தவர்களே இருந்துள்ளனர்.அவர்களுக்கு உதவியாக  மூப்பன், காலாடி, மண்ணாடி என்று அழைக்கப்பட்டவர்கள் இருந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தேவேந்திர குல வேளாளர்கள் என்ற ஒரே பிரிவின்கீழ் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் படைவீரர்களாகவும்,வேளாண்தொழில் செய்பவர்களாகவும் இருந்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தமிழர்களின் அரசியல் கட்டமைப்பில் உயர்ந்த நிலையில் இருந்துள்ளனர்.
     இவர்கள் தவிர தொழில் சார்ந்து பல பிரிவுகள் இருந்தன.

நிறுவனம்:
       

    இன்று நிறுவனம் என்பது பல படிநிலைகளை கொண்டது.இதில் படிநிலையில் மேல் இருபவர்களுக்கும்,படிநிலையில் கீழ் இருப்பவர்களுக்கும்,அதிகாரத்தில் சில வேறுபாடுகள்  என்பது உண்டு.இதை ஏற்றதாழ்வுகள் என்று கூற முடியாது.

அரசு:


     அரசு என்பது ஒரு நிறுவனத்திற்கு உரிய அதே கட்டமைப்பை கொண்டது.இதில் அதிகார ரீதியாக சில வேறுபாடுகள் இருந்தபோதிலும் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட்டது.