Wednesday 30 April 2014

திராவிடம் Vs தமிழர்கள்

 திராவிட கட்சிகள் Vs பள்ளர்கள்:
   திராவிட கட்சிகளுக்கும் பள்ளர்களுக்கும் இடையேயான பகையானது அவர்களின் முன்னோர்களான வந்தேறி வடுகர்கள் காலத்தில் தொடங்கி இன்றளவும்  வடுகர்களின் வாரிசுகளான திராவிடர்கள்(தமிழர்கள் அல்லாதவர்கள் ஆனால் உலக தமிழர்களின் ஒரே தலைவர்கள் என்று பறை சாற்றிகொள்பவர்கள்) மூலம் தொடர்கிறது.பள்ளர்கள் மீதான திராவிட அடக்குமுறையானது தாமிரபரணி படுகொலைகள்,பரமக்குடி துப்பாக்கி சூடு என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அரசாலும் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது.


   ஒவ்வொரு நிகழ்வுகளின் போதும் நிறைய உயிர் இழப்புகளும்,அதை தொடர்ந்து அந்நிகழ்வுகளை நிகழ்த்திய அரசாங்கன்களே,அவர்களுக்கு எதிராக ஒரு விசாரணை ஆணையம் அமைப்பதும்,அவர்கள் பலபக்கங்களில் விசாரணை அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

திராவிடர்கள் Vs ஈழ தமிழர்கள்:

        தமிழ் நாட்டில் பள்ளர்களுக்கு எதிராக நடந்த அதே அடக்குமுறைகளும்,இன அழிப்புகளும் அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடகின்றது.அங்கு திராவிட கட்சிகளின் இடத்தில் இருப்பவர் ராஜபக்சே.நினைத்திருந்தால் அன்று ஆட்சியில் இருந்த கருணாநிதி இந்த இன அழிப்பை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால் அவர் அப்படி செய்ய வில்லை.காரணம் அங்கு இறப்பவர்கள்  தமிழர்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ.இப்படி உலகில் தமிழர்கள் எங்கு வீழ்ந்தாலும் அதற்கு பின்னால் கண்டிப்பாக திராவிடர்கள் இருகின்றனர்.
  ஈழத்தில் இன அழிப்பை நிகழ்த்திய ராஜ பக்சே அரசே பின்னாளில் அவற்றை விசாரிக்க ஒரு ஆணையம் அமைத்து தமிழர்களுக்கு நீதி கிடைத்திட கடுமையாக முயற்சிகள் எடுக்கின்றது.ஆனால் கொடுமை என்னவெனில் பள்ளர்களின் மீது பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு சம்பத் கமிசன் மூலம் துப்பாக்கி 

சூட்டை நியாயப்படுத்திய  ஜெயலலிதா அரசு,தமிழக 

சட்டமன்றத்தில் ராஜ பக்க்ஷேவிற்கு எதிராக ஒரு வரலாற்று 

சிறப்பு மிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது

திராவிடர்கள் Vs  தமிழ் சாதிகள்:





     பரமக்குடி துப்பாக்கி சூடானது,உண்மையில் தமிழர் அல்லாத  ஒரு அரசாங்கத்திற்கும் ஒரு குறிப்பிட்ட தமிழ் சாதிக்குமான நீண்டநெடிய போர் ஆகும்.ஆனால் அதை ஒரு சாதி மோதலாக  திரிக்கும் முயற்சியும் நடந்தது.பள்ளர்களின் எதிரியாக திராவிட கட்சிகளால் சித்தரிக்கபடுகின்ற எந்த குறுப்பிட்ட சாதியும் இதில் நேரடியாக சம்மந்தப்படவில்லை.

    இதே போன்ற அடக்குமுறைகள் பிற தமிழ் சாதிகளுக்கும் வரக்கூடிய வாய்புகள் உள்ளன.எந்த ஒரு சாதியும் “தமிழ் நாடு தமிழருக்கே” என்ற நிலையை எடுக்கும் பட்சத்தில் அவர்கள் மீதும் இது போன்ற துப்பாக்கி சூடும்,விசாரணை ஆணையங்களும் கண்டிப்பாக வரும்..அதற்கான சமீபத்திய உதாரணம் மரக்காணத்தில் நடந்த வன்னியர்களின் படுகொலைகளும்.மருத்துவர் ராமதாஸ் மீது போடப்பட்ட வழக்குகளுமே ஆகும்.இந்நிகழ்வுகள் அனைத்தும் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் திராவிட எதிர்ப்பு நிலைக்கு பிறகு நடந்தவைகளே!!!


திராவிடர்கள் Vs  தமிழ் ஈழ மாணவர் கூட்டமைப்பு
        ராஜபக்சே அரசு மீது இன அழிப்பிற்காக மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று தமிழகம் எங்கும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக ஒரு மாதத்திற்கும் மேலாக பலகட்ட போராட்டங்களை நடத்தியது.தமிழகத்தில் கிந்தி எதிர்ப்பு போராட்டர்திற்கு பிறகு எந்த ஒரு அரசியல்,சாதிய கட்சிகளின் துணை இல்லாமல் தன்நெளிச்சியாக தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற ஒரே போராட்டம் இந்த தமிழ் தேசியத்திற்கான மாணவர் போராட்டம் .திராவிட கட்சிகளின் தமிழரை பிரித்தாளும் சூழ்ச்சியையும் தாண்டி தமிழர் அனைவரும் சாதி மதங்களையும் தாண்டி தமிழர் என்று ஓர் அணியில் திரண்டு போராடிய போராட்டம் இதுவே ஆகும்.இதை சற்றும் எதிர்பார்க்காத இருபெரும் திராவிட கட்சிகள் தங்களின் ஆட்சியில் கல்லூரிகளுக்கு விடுமுரையிட்டு முற்றுப்புள்ளி வைத்தாணர்.
முள்ளிவாய்கால் முற்றம் இடிப்பு:

        ஈழ போரில் இறந்த பல லட்ச தமிழர்களின் நினைவாக தஞ்சை         மண்ணில்        முள்ளிவாய்கால் முற்றம் அமைக்கப்பட்டது.அதை முடக்கும் விதமாக ஜெயலலிதா தலைமையிலான திராவிட அரசு பல முயற்சிகள் மேற்கொண்டது.அணைத்து தடங்கல்களையும் தாண்டி தமிழர்களுக்கான ஒரு நினைவிடம் முதல்முதலில் தமிழ் மண்ணில் வெற்றிகரமாக திறக்கப்பட்டது.அதை சற்றும் விரும்பாத இந்த அரசு சில நாட்களிலேயே  முள்ளிவாய்கால் நினைவு முற்றத்தை சுற்றிவுள்ள சுற்றுசுவரை இடித்துதள்ளி வழக்கம் போல தமிழர்களின் நினைவுகளை கம்பி வேலிகளுக்குள் தள்ளியது.
   இவ்வாறாக திராவிடர்களுக்கு எதிராக தமிழர்கள் அணிதிரளும் போதெல்லாம்,அவர்கள் சொந்த மண்ணிலேயே ஒடுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.காரணம் தமிழர்கள் மீண்டெளுந்தால்,திராவிடர்களால் தமிழ் மண்ணில் வாழ வழியில்லாமல் போய்விடும்.இதை உணர்ந்து தமிழ் இனம் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்.